/* */

மதுரையில் சித்திரைத் திருவிழாவை அறிய காவலன் செயலி: காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தகவல்

சித்திரைத் திருவிழாவின் ஒரு அங்கமான கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை எங்கு உள்ளார் என அறியும் காவலன் செயலி அறிமுகம்

HIGHLIGHTS

மதுரையில் சித்திரைத் திருவிழாவை அறிய காவலன் செயலி: காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தகவல்
X

சித்திரைத் திருவிழாவின் ஒரு அங்கமான கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை எங்கு உள்ளார் என அறியும் காவலன் செயலி அறிமுகமானது.

மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ளது. சித்திரை திருவிழாவின்போது, மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் உள்ள Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த Track Alagar வசதியின் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அருள்மிகு கள்ளழகர் எதிர் வரும் 14.4.2022 தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும்வரை, கள்ளழகர் எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தங்கள் செல்போனில் மதுரை காவலன் என்ற செயலில் Track Alagar என்ற Link மூலம் வரும் Map ல் தெரிந்து கொள்ளலாம். இதனால் மக்கள் நேரம் விரயமாவதை தடுக்க முடியும் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்க முடியும். இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை தவிர்த்து, கள்ளழகரை தரிசிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் தங்களின் Android செல்போனில், உள்ள Play Store ல் இலவசமாக மதுரை காவலன் செயலியை Download செய்து கொள்ளலாம். ஏற்கனவே, செயலில் Download செய்தவர்கள் அதனை அப்டேட் செய்த பின்னால் ,மதுரை காவல் செயலில் உள்ள Track Alagar ( கள்ளழகர் வருகை) என்ற Link மூலம் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்த மதுரை காவலன் செயலியில், இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். மற்றும் இந்த செயலி மூலம் புகார்கள் 600, மற்றும் இந்த செயலில் locked home வரும் வசதி மூலம் இதுவரை 1100 தகவல்கள் பெறப்பட்டு உரிய ரோந்து ஏற்பாடு செய்து கண்காணிக் கப்பட்டுள்ளது. இந்த வசதியானது 2G செல்போனிலும் text message கள்ளழகர் வருகையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். சித்திரை திருவிழா கள்ளழகர் வருகையினை முன்னிட்டு, அழகர் கோவிலிருந்து மதுரை மாநகர் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்கு சுமார் 1000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Updated On: 9 April 2022 6:09 PM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு