சிவகாசி பகுதியில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

சிவகாசி பகுதியில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென்று பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

சிவகாசி பகுதியில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று மாலை திடீரென்று பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் முழுவதுமே கடந்த 10 நாட்களாக கோடை வெயில் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. விடுமுறை நாள் என்பதால், பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். சிவகாசி பகுதியில் இன்று காலை, வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்ததால், நகரின் முக்கிய சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில், திடீரென்று மேகங்கள் திரண்டு வந்தன. அதே நேரம் பலத்த காற்று வீசத்துவங்கி, லேசான சாரல்மழை பெய்யத்துவங்கியது. சற்று நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் முக்கால் மணி நேரம் காற்று, இடி மின்னல் இல்லாமல் பரவலாக பலத்த மழை பெய்தது. திடீர் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சிவகாசி பகுதி மக்கள், திடீர் கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story