அமைச்சர் உத்திரவிட்டும் பென்ஷன் கிடைக்கவில்லை: ரயில்வே பொறியாளர் முறையீடு
ரயில்வே பொறியாளராக பணியாற்றி ஒய்வு பெற்ற முத்துக்கருப்பன்.
திருமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவின்படி வழங்க வேண்டிய ரூபாய் 1 கோடியே 25 லட்சம் பணம் வழங்காததால் வேதனையடைந்துள்ளராம். பணமின்றி உடல்நல குறைவில் உள்ள மனைவியுடன் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்வதாலும், தனது வீட்டை சிலர் அபகரிக்கும் முயற்சி செய்து, தன்னை கொலை மிரட்டல் செய்து வருவதாகவும் திருமங்கலம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன்(62) மதுரை ரயில்வேயில் ஏ கிரேடு அமைப்பில் 33 ஆண்டுகள் தென்னக ரயில்வே பொறியாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். தனக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தரவேண்டிய ரூ 1.கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் தராமல் இழுத்தடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முத்துக்கருப்பன் இந்திய கவர்னருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவின் விசாரணையில், இவருக்கு சேர வேண்டிய தொகையை அளிக்கும்படி 2019 டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணத்தை ரயில்வே அமைச்சர் அவர்களிடம் தரும்படி கூறியும், இவருக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை என கூறபடுகிறது.
இந்நிலையில், தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த முத்துக்கருப்பன், தனக்கு தரவேண்டிய தொகையை கருணை அடிப்படையில் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளாகுளம் கிராமத்த்தில் இவர் வசிக்கும் வீட்டை சிலர் அபகரிக்க முயற்சி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் திருமங்கலம் நீதிமன்றத்தில் முத்துக்கருப்பன் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu