தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவருக்கு அபராதம்
தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து தில்லிக்கு ஆவணங்கள் இல்லாமல் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது மதுரை வணிக வரித்துறையினர் 9 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மதுரை வணிக கோட்ட அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் இந்திராவுக்கு ஆவணங்கள் இல்லாமல் காப்பர் மற்றும் இரும்பு ஸ்கிராப்புகள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் தலைமையில் வணிக வரித்துறையினர் மதுரை ரயில்வே ஸ்டேஷன் சரக்குப் பிரிவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் எவ்வித ஆவணமும் இன்றி மதுரையில் இருந்து தில்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காப்பர் மற்றும் இரும்பு ஸ்கிராப் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. அவற்றை ஆய்வு செய்தபோது 23 லட்சம் மதிப்புள்ள7 டன் காப்பர் மற்றும் இரும்பு ஸ்க்ராப்கள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். எனினும் அவர்கள் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவர்களுக்கு 200 சதவீதம் அபராதமாக ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu