மதுரை அருகே திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் சில்மிஷம்; வாலிபர் கைது

மதுரை அருகே திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் சில்மிஷம்; வாலிபர் கைது
X

பைல் படம்.

மேலூர் அருகே 15 வயது சிறுமியை திருமண ஆசைக்கூறி அழைத்துச் சென்றதாக வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றதாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமியை பரமக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வேல்ராஜ் ( 28) என்பவர் திருமண ஆசைக்கூறி வெளியில் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தகவலின் பேரில் அவரது தந்தை மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வேல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!