குடிக்க பணம் தர மறுத்த இரண்டு பேரை கொலை செய்த வாலிபர் கைது

குடிக்க பணம் தர மறுத்த இரண்டு பேரை கொலை செய்த  வாலிபர் கைது
X
மதுரை அருகே மது அருந்த பணம் கேட்டபோது மறுத்த 2 பேரை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையிடைத்தனர்

மது குடிக்க பணம் தராத இரண்டு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் இதற்கு காரணமான மதுக்கடையை மூட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை உத்தங்குடி பகுதியில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் இதயத்துல்லா. கடந்த திங்கள்கிழமை இரவு இதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சதீஸ் குமார் என்பவர் மது அருந்த 30 ரூபாய் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று சொன்ன காரணத்தினால் அவரை வெட்டியதில் உயிரிழந்தார். இதே வாலிபர், புதன்கிழமை இரவு ஒத்தக்கடை பகுதியில் உள்ள பழனி என்ற வாலிபரிடம் மது அருந்த ரூபாய் 50 கேட்டுள்ளார். அவரும் தர மறுத்ததால் சதீஸ் குமார் வெட்டியதில் உயிரிழந்தார். இவ்விரு கொலை தொடர்பாக , மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சதீஸ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உத்தங்குடி இதயத்துல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்த உத்தங்குடியில் உள்ள மதுபான கடையை மூட வலியுறுத்தியும் உத்தங்குடி பகுதி பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மதுக்கடையை மூட வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!