வாழ்க்கை பயணத்தில் நாம் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்: நிதியமைச்சர் பேச்சு

வாழ்க்கை பயணத்தில் நாம் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்: நிதியமைச்சர் பேச்சு
X

 விழாவில் சிறப்பு விருந்தினராக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்

நம் அச்சத்தை போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே.இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வியே ஆகும்

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டால் வெற்றி அடையலாம் என்றார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகாராஜன்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூாியில், 2018 - 2021 கல்வியாண்டு மாணவியருக்கான 56 -ஆவது பட்டமளிப்பு விழா பொன்விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாகச் சிற்றாலயப் பொறுப்பாளா் முனைவா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி இறைவேண்டல் செய்தார் பட்டமளிப்பு விழாவிற்கான தொடக்கத்தினைக் கல்லூாி முதல்வா் முனைவா் கிறிஸ்டியானா சிங் தொடங்கி வைத்தாா். கல்லூாியின் துணைமுதல்வா் முனைவா் பியூலா ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினரை வரவேற்றாா்.2022 - 2023 கல்வியாண்டிற்கான அறிக்கையை கல்லூாி முதல்வா் காணொலிக் காட்சியாக வழங்கினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டமளித்து பேசியதாவது, மாந்தர் தம் கற்றனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை. நம் அச்சத்தை போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வியே ஆகும்.

கல்வி தான் ஒருவனை அறிவாளி ஆக்கிறது. ஒருவனுடைய அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் கல்வியாகும். கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்" என்கின்றார் வள்ளுவ பெருந்தகை.அதாவது கற்றவர் மட்டுமே கண்ணுடையவர்களாக கருதப்படுவர். கல்வி கற்காதவர்கள் கண்ணிருந்தும் முகத்திரண்டு புண்ணு டையவர்களாக கருதப்படுவர் இதுவே இதன் கருத்தாகும்.

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரிற்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்றுதான் பிறப்பிலிருந்து இறப்புவரை ஒரு மனிதனுடன் கூடவரக்கூடியது. சமூகம் கல்வியில் சிறக்கப் பெண் கல்வி முக்கியமானது. மாணவர்களாகிய தாங்கள் சிறந்த கல்வி பெறுவதற்கும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைவதற்கும் சமூகத்தில் சிறந்த தலைமைத்துவம் உடையவர்களாகத் திகழ்வதற்கும் இக்கல்வி நிறுவனம் உறுதுணை புரிந்து வருவது பாராட்டுக்குரியது.

சமுதாயத்தில் ஏற்றம் பெற கல்வி ஒன்றே சிறந்தது என்பதைப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை உதாரணமாகக் கொள்ளலாம். வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் யார் என்பதை அடையாளங் கண்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். தொடா்ந்து 1257 மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவிற்கான உறுதி மொழியைக் கல்லூாி முதல்வா் கூற மாணவியா் ஏற்றுக் கொண்டனா். கல்வியில் சிறந்த மாணவியருக்குப் பாிசுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூாி குறித்த நினைவுகளைப் பேரவை முன்னாள் மாணவி நிக்கிதா பகிா்ந்து கொண்டாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!