அலங்காநல்லூர் அருகே காலை உணவுத் திட்டத்தை தொடக்கி வைத்த எம் எல் ஏ
அலங்காநல்லூர் அருகே காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம். எல் .ஏ. தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ வெங்கடேசன் தொடக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடக்கி வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காலை உணவுகளை பரிமாறி, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் ஆனையாளர் தங்கபாண்டி, வட்டார கல்வி அலுவலர் ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சகிலா வரவேற்றார்.
முன்னதாக இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 41 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்புமுத்து, வாடிப்பட்டி சேர்மன் பால்பாண்டியன், இளநிலை பொறியாளர் துர்கா,
விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி தனிச்சியம் மருது, சந்தனகருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu