அம்பேத்கர் பிறந்தநாள்: உருவச்சிலைக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள்: உருவச்சிலைக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் மரியாதை
X

மதுரையில் அவுட் போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் பி மூர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரையில் அவுட் போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் பி மூர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை அரசு விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியில் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இந்த நிலையில், மதுரையில் அவுட் போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் பி மூர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், மதிமுக கட்சி சார்பில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், அதிமுக சார்பில் கணேசன் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், ஓபிஎஸ் அணி சார்பில் மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் , மதுரை மாநகர மாவட்டத் தலைவர் சுசீந்திரன் தலைமையில், மற்றும் பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story