மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள்: போலீஸ் விசாரணை

மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள்: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

டீக்கடை உரிமையாளரை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

மதுரை பாலரெங்காபுரத்தில் டீக்கடை உரிமையாளரை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம்(59.) இவர் பாலரங்காபுரம் பழைய நடனா தியேட்டர் அருகே டீ கடையை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு சென்ற காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்த அருண்குமார்(27,) இவரும் மேலும் சிலரும் கடைக்கு முன்பாக நிறுத்தி இருந்த சைக்கிளை தூக்கி வீசி எறிந்துள்ளனர். இதை செல்வம் தட்டி கேட்டார். இதனால் ஆக்கிரமடைந்த அவர்கள் டீக்கடை உரிமையாளர் செல்வத்தை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து செல்வம் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.இது தொடர்பாக போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அருண்குமார் என்ற அருணை கைது செய்தனர்.

மதுரை பொறியாளர் நகரில் வீடு புகுந்து அக்காள் தம்பியை தாக்கிய ஆக்டிங் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பொறியாளர் நகர் நான்காவது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் பரத் 22. இவரது சகோதரி நவீனா 25. இவர்கள் தந்தையின் ஆக்டிங் டிரைவராக நரசிங்கம்பட்டி சுகுமாரன் மகன் முத்துமணி 35 என்பவர் வேலை பார்த்து வந்தார் .சம்பவத்தன்று இவர்கள் வீட்டுக்குள் புகுந்த டிரைவர் முத்துமணி தம்பி பரத்தையும் அக்கா நவீனாவையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பரத் கொடுத்த புகாரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆக்டிங் டிரைவர் முத்துமணியை கைது செய்தனர்.

அவனியாபுரத்தில் சமையல் செய்த போது தீ விபத்து:பெண் பலி

அவனியாபுரம் சக்திஸ்வரி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி( 58.). இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்து எரிந்தது. இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவருடைய மகன் சரவணன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பேருந்து நிலையத்தில் வலிப்பு நோய் வந்தவர் மயங்கி விழுந்து பலி .

கூடல் புதூர் வைகை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 57). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படும்.அதற்கான சிகிச்சையும் பெற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார் .அப்போது திடீரென்று வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி விஜயா திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனியாபுரம் வெள்ளக்கல் ரோட்டில் பைக்கில் தவறி விழுந்து வாலிபர்பலி :

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் வீரணன் மகன் கணேசன்( 37.). இவர் பைக் ஓட்டிச் சென்றார். வெள்ளை ரோடு ஆரம்பப்பள்ளி பின்புறம் சென்றபோது திடீரென்று பிரேக் பிடித்ததால் பைக் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

மேலக்கால் பள்ளி அருகே போதை மாத்திரை விற்பனை செய் மூன்று வாலிபர்கள் கைது:

மேலக்கால்மெயின் ரோட்டில் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்தை ரகசியமாக கண்காணித்தனர் .அப்போது மூன்று வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது.

Tags

Next Story