வளர்பிறை பஞ்சமி: வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை
மதுரை மேலமடை விநாயகர் கோயிலில் உள்ள வராஹியம்மன்
வளர்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மன் நாளை நடைபெறும் சிறப்பு பூஜையிவ் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை பஞ்மியையொட்டி, டிச. 8.ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து அபிஷேக, அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெறும். இத்திருக்கோயிலில், மாதந்தோறும், வளர்பிறை பஞ்சமியன்று, வராஹியம்மனுக்கு ஹோமங்களும், சிறப்பு அர்ச்சணைகளும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஏராளமான மகளிர்கள் பங்கேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்வர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், சௌபாக்யா மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர். பூஜையில் பங்கேற்போர், நெய், பழங்கள், தேங்காய், அவுல், பொரிகடலை, அரளிப்பூக்கள், வஸ்திரங்கள் கொண்டு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu