/* */

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வணிக ஆலோசனைகள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

HIGHLIGHTS

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
X

மதுரை தொழில் வர்த்தக சங்கமும், தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனமும் தொழில் சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மதுரை தொழில் வர்த்தக சங்கமும், தஞ்சாவூர் தேசிய உணவு தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனமும் தொழில் சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் இணைந்து உணவுப் பதப்படுத்துதல் துறையில் வாய்ப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடுவர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது.தஞ்சாவூர், தேசிய உணவுத் தொழில்நுட்ப மேலாண் நிறுவன இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ள தொழில் மற்றும் வணிக வாய்ப்புகள் மத்திய மாநில அரசுகள் இத்துறைக்கு அறிவித்துள்ள புதிய திட்டங்கள், சலுகைகள் மற்றும் வழங்கப்படும் ஊக்கத் தொகைகள் குறித்தும் வணிக ஆலோசனைகள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து, மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், நிறுவன இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தற்போது, உணவுத் தொழில் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படும் தொழில்கள் ரீதியான பிரச்னைகளுக்கு, தஞ்சாவூர் தேசிய உணவுத்தொழில் நுட்ப மேலாண்மை நிறுவனத்தின் ஆலோசனைகள், சேவைகள் வழங்கப்பட்டு, உணவுப் பதப்படுத்துதல் தொழிலில் புதிய தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் வணிக வாய்ப்புகளைப் பெற்று தங்களது தொழிலை பன்முகப்படுத்த உதவும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Updated On: 15 Dec 2021 11:00 PM GMT

Related News