மதுரையிலிருந்து காசிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சுற்றுலா ரயில்
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி முன்னோர் வழிபாட்டிற்காக மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயில் விடப்படுகிறது.
கங்கையில் புனித நீராடுவது, காசியில் சுவாமி தரிசனம் செய்வது இந்துக்களின் புனித கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள இந்துக்களும் காசி புனித யாத்திரை செல்வது உண்டு. குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் கங்கை காசிக்கு செல்வதும், வட மாநில மக்கள் நமது ராமேஸ்வரத்தை தேடி வருவதும் பன்னெடுங்கால மரபாக இருந்து வருகுிறது. நடந்தே போய் கடமை செய்த காலம் மாறி தற்போது ரெயில் விமானம் என மக்கள் தங்களது புனித யாத்திரையை தொடங்கி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களை தரிசிக்கும் வகையில் இந்திய ரயில்வே பாரத் கௌரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. மதுரையில் இருந்து அடுத்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் நவம்பர் 18 அன்று இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில், காசி, கயா, பூரி ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல இருக்கிறது.
நவம்பர் 18 அன்று புறப்படும் ரயில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக முதலில் விஜயவாடா செல்கிறது. பின்பு, நவம்பர் 19 அன்று உத்தரப்பிரதேசம் மாணிக்பூர் சித்திரக்கூடம் சென்று நவம்பர் 20 சர்வ ஏகாதசி தினத்தன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோவில்களில், தரிசனம். நவம்பர் 21 பிரதோஷ தினத்தன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ,ராமஜன்ம பூமி கோவில் தரிசித்து நவம்பர் 22 சிவராத்திரி தினத்தன்று காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில், தரிசனம். நவம்பர் 23 சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம். நவம்பர் 24 அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். நவம்பர் 26 அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம். நவம்பர் 27 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேரும்.
பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்கள் அறிய 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu