உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை தொடக்கி வைத்த நீதிபதி

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை  தொடக்கி வைத்த  நீதிபதி
X

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட  சைக்கிள் பேரணி:

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள்பேரணியில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளந்திரையன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் நீதிபதி சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி மொத்தமாக 15 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது

சைக்கிள் பேரணியை, நீதிபதி இளந்திரையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் பேரணியில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடங்கி பாண்டிகோயில், வேளாண்மை கல்லூரி, ஒத்தக்கடை வழியாக மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வந்தடைந்தது.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக, இந்த சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த சைக்கிள் பேரணியில் ,கலந்து கொண்ட வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி