தலைவி படத்துக்கு தடை விதிக்க கோரி மனு
ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறாக தயாரிக்கப்பட்ட தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி, மத்திய தனிக்கைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மத்திய திரைப்பட தனிக்கைக் குழுவிற்கும், தமிழக செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகை கங்கனாரனாவத் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தெரிவிக்கும் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில், ஜெயலிலிதாவை சட்டமன்ற உறுப்பினர்களால் தாக்கப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி யூ.டியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காட்சியை மருத்துவத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன் முகநூலிலும் வெளியிட்டுள்ளார். இது போன்று தாக்கப்பட்ட சம்பவம் நடந்ததாக சட்டபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சட்டமன்ற நிகழ்வுகள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகும். இந்த காட்சி சட்டமன்றத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகும். குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படத்தக்கதாகும்.
எனவே, இந்த காட்சியை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தடை செய்யும் வரை தலைவி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu