மேலூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில பல வருடங்களாக இங்கு அடிப்படை வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கழிப்பறை வசதி ,குடிநீர் வசதி மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்லூரியில் பல வருடங்களாக மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை மாணவ-மாணவிகள் கோரிக்கையை வைத்து எந்தவித செவிசாய்க்காமல மெத்தனமாக இருந்துள்ளனர் கல்லூரி நிர்வகம். இந்நிலையில் வேறு வழியின்றி போராட்டத்தில் களம் இறங்கியுள்ள மாணவ மாணவிகள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும்இல்லை என குற்றம் சாட்டி பல மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். தகவலறிந்து மேலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .
மேலும் கல்லூரி நிர்வாகமும் விரைவாக தமிழக அரசுக்கும் மதுரை மாவட்டம். ஆட்சியரிடமும் இது சம்பந்தமாக கூறி விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக வாக்குறுதி கொடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவ மாணவிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu