இதய நோய்க்கு மன அழுத்தமே காரணம்: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் பேட்டி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள்
இந்தியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரிக்க மன அழுத்தமே முக்கிய காரணம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இதயவியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இதயவியல் துணைத் தலைவர் டாக்டர் கணேசன், இதயம் மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவ உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எஸ் குமார் ஆகியோர் தெரிவித்த விவரம்:
இந்தியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரிக்க மன அழுத்தமே முக்கிய காரணம், இருந்தபோதிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான சமயத்தில் மருத்துவம், பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை ஆகியவற்றால் 80 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தனர்
இதில், மருத்துவ நிர்வாகி டாக்டர் பி. கண்ணன் , முதுநிலை இதயவியல் நிபுணர்கள் டாக்டர் சிவகுமார் ,முதுநிலை இதயவியல் நிபுணர்கள் டாக்டர் செல்வமணி, டாக்டர் ஜெயபாண்டியன், டாக்டர் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu