மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் பயிலரங்க கூட்டம்

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் பயிலரங்க கூட்டம்
X

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட கிழக்கு மற்றும் வடக்கு தொகுதி நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்க கூட்டம்.

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, வடக்கு மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட த் தலைவர் பிலால் தீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் அஹமது, வர்த்தக அணி வடக்கு மாவட்ட த் தலைவர் ரம்ஜான் எஸ்.டி.டி.யூ. மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாகீர் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள் .

வடக்கு தொகுதி செயலாளர் ஜின்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்டத் தலைவர் பிலால் தீன், நமது கட்சியின் சேவையே! நமது நாட்டிற்கு இன்றைய தேவை என்ற தலைப்பிலும் வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் பகுர்தீன், கட்சியின் கட்டமைப்பு என்ற தலைப்பில் பயிலரங்கை சிறப்புடன் நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.

கிழக்கு தொகுதி பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார்.

இரண்டாம் நாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ .கட்சி முழு ஆதரவை வழங்கும், எஸ்.டி.டி.யூ .மதுரை வடக்கு மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மதுரையில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்பர்.

பொய் மற்றும் வெறுப்பை மையமாக கொண்டு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தமிழக அரசு தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்வதோடு, திரையரங்குகளில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு அனுமதித்த திரையரங்குகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், தமிழில் வெளியாகப் போகும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்பதையும், தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!