மதுரை, திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பூஜை

மதுரை, திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பூஜை
X

பிரதமர் மோடிக்காக திருப்பரங்குன்றத்தில்  நடந்த சிறப்பு பூஜை.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மதுரை:

திருப்பரங்குன்றம் பகுதியில் தனியார் மஹால் ஒன்றில் பாரத பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மகா மிருதயுஞ்ஜய யாகம் நடந்தது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த சம்பவத்தின் அடிப்படையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மதுரை மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் மஹால் ஒன்றில் மகாமிருத்யுஞ்ஜய யாகம் ஐயர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!