மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு  சிறப்பு அபிஷேகம்
X

சுயம்பு ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

மதுரை கருப்பாயூரணி அருகே, திடியன் ஊராட்சிக்குட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஓடைப்பட்டி கிராமத்தில் சாலையோரமாக சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

மிகவும் பழமையான புராதனமான இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில், சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!