பெண் குழந்தைகள் படித்தால் சமுதாய முன்னேற்றம் ஏற்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பெண் குழந்தைகள் படித்தால் சமுதாய முன்னேற்றம் ஏற்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
X

மேலூரில் நடைபெற்ற ரோட்டரி விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளிடம் பேசினார்.

மேலூரில் நடைபெற்ற ரோட்டரி விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளிடம் பேச்சு.

*பெண்பிள்ளைகள் படித்ததால் சமுதாயமே நல்லா இருக்கும் மேலூரில் நடைபெற்ற ரோட்டரி விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளிடம் பேச்சு:

மதுரை மாவட்டம், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை இன் ன்னவேட்டர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், மற்றும் கழிப்பறை கட்டிடங்களை ,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மதுரை இன்னவேட்டர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திட்ட முதன்மை தொடர்பாளர் பி. குமரப்பன் அனைவரையும் வரவேற்று திட்ட அறிக்கை வாசித்தார்.

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரிடம் கலந்துரையாடிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, உங்கள் பெற்றோர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என கேட்டுக் கொண்டதுடன், ஆண் படித்தால் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கும். ஆனால், பெண் பிள்ளைகளான நீங்கள் படித்தால் சமுதாயமே நல்லா இருக்கும். அதனால் நீங்கள் நல்லா படித்து சமுதாய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில், இதுபோன்று அரசு பள்ளிகளை மேம்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும், அதற்காக அரசு சார்பில் தனி வலைத்தளம் தொடங்கப்படும் என தெரிவித்தார். திட்டமிட்டபடி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு தன்னார்வர்களும் படித்த இளைஞர்களும் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெயக்கண், ஆளுநர் தேர்வு ஜெரால்ட் மற்றும் ஆளுநர் நியமனம் ஆனந்த ஜோதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், மேலூர் வட்டாட்சியர் இளமுருகன், மதுரை இன்ன வேட்டர்ஸ் ரோட்டரி சங்கம் தலைவர் எம் கார்த்திகேயன் செயலாளர் ஆர் ஸ்ரீதர் சோம சேகர் மோசஸ் பியர்ஸ், ராஜா செனதிராஜா மற்றும் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ராவணன் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா கலாமணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குமரப்பன் டாக்டர் என் செந்தில்நாதன் டாக்டர் பரத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முதன்மை திட்ட தொடர்பாளர் குமரப்பன் செய்திருந்தார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!