/* */

சிலம்பப்போட்டி: பத்து வயது சிறுமியின் சாதனை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

HIGHLIGHTS

சிலம்பப்போட்டி: பத்து வயது சிறுமியின் சாதனை
X

 மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்பச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

10 வயது சிறுமி சிலம்பாட்டத்தில் நோபல் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனை புரிந்தது.

மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்பச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்த்தி்ல் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர். மேஷாக் பொன்ராஜ், தலைமை வகித்தார்.நிகழ்வில், தமிழியல் துறைத் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் இயக்குநர் (பொ) முனைவர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில், துணைப் பதிவாளர் மீனாட்சிசுந்தரம், நோபல் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பாளர் கௌதம் முன்னிலையில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை சோம சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணப்பாண்டியன்-ரேவதி தம்பதியினர் இவர்களது மகள் ஹரிணி (10) கடந்த 6 வயது முதலே சிலம்பம் பயின்று மாநில அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுளார்.தற்போது "நோபல் புக் ஆப் ரெக்கார்டு" சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு அந்நிறுவனத்தால் தேர்வு செய்யபட்டுள்ளார். பத்து வயதில் 10 நிமிடம் 10 நொடிகளில் சிலம்பக் கலையில் 32 தற்காப்பு முறைகளை பயன்படுத்தி சாதனை புரிந்துள்ளார். சமுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்டு தற்காப்பு முறையை பயன்படுத்தி பாலியல் தொல்லை மற்றும் சமுக விரோதிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும், தன்னம்பிக்கை யளிக்கும் சிலம்ப பயற்சி உதவுவதாக சிறுமி ஹரிணி கூறினார்.

Updated On: 8 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  5. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...
  8. திருவண்ணாமலை
    கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு...
  9. ஈரோடு
    அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...