மருத்துவ மாணவி கொலைக்கு எதிராக மதுரையில் கையெழுத்து இயக்கம்..!

மருத்துவ மாணவி கொலைக்கு எதிராக மதுரையில் கையெழுத்து இயக்கம்..!
X

கொல்கத்தா மருத்துவ பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட சம்பவத்தைக் கண்டித்து நடந்த கையெழுத்து இயக்கம்.

கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொலைசெய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

மருத்துவ மாணவி பாலியல் படுகொலை கண்டித்து மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்:

மதுரை:

மதுரை, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மேற்கு வங்க மாநில அரசு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து உரிய நீதி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

பெண்களுக்கு பணியிடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி முன்பு மாவட்டத் தலைவர் டேவிட் ராஜதுரை தலைமையில் வெள்ளியன்று மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்தை, மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மண்டலம் - 2 தலைவர் சரவண புவனேஸ்வரி, ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் சசிகலா, மாமன்ற உறுப்பினர் குமரவேல், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சௌரி ராமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா, தமிழ்நாடு நகர சுகாதார செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பஞ்சவர்ணம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா, இந்திய மாணவர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பிருந்தா, மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு மதுரை மருத்துவக் கல்லூரி முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டனர்.

Tags

Next Story
ai future project