/* */

சேது சமுத்திரதிட்டம் தொழில்முன்னேற்றத்துக் கான முக்கியத் திட்டம்: துரை வைகோ

வாழ்க்கையில் படித்து முன்னேறுவது, இந்த சமுதாயத்தையும் முன்னேற்றுவது போன்ற கடமைகள் இளைஞர்களுக்கு இருக்கிறது

HIGHLIGHTS

சேது சமுத்திரதிட்டம் தொழில்முன்னேற்றத்துக் கான  முக்கியத் திட்டம்: துரை வைகோ
X

மதிமுக நிர்வாகி துரை வைகோ

.மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடத்தப்பட்ட யானைமலை மாரத்தான் போட்டியை மதிமுக தலைமை நிலை செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,அரிய மலைகளில் ஒன்று மதுரை யானைமலை ஒரே பாறைகளால் ஆனது யானைமலை இதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த மலை குவாரி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யும்போது இந்த பகுதி மக்களுடன் இணைந்து யானைமலையை காப்பாற்றுவதற்காக தலைவர் வைகோ போராடியுள்ளார். பல இயற்கை வளங்களை காப்பாற்றியவர் வைகோ. இந்த மலையை காப்பாற்றுவதற்காக மதிமுக சார்பில் ஆரம்பிக்கப்பட்டது யானை மாரத்தான் இன்று நடந்த மாரத்தான் சமூக நல்லினத்தை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டது. ஜாதி மத வேறுபாடுகளை கடந்து மனிதத்தால் ஒன்றிணைவோம்.

சேது சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு இது மிக முக்கிய திட்டம். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. பின்னர் நேரு காலத்திலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் கொண்டு வந்தால் தென் மாவட்ட தொழில்கள் மேலோங்கும். அரசியல் காரணங்களால் மதவாத சக்திகளால் இந்த திட்டம் நிறைவேறாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.மதிமுக சார்பாக முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

சினிமா நடிகர்கள் பொருத்தவரை அவர்கள் திரையில் தோன்றி நடிப்பதை ரசிக்க வேண்டியதுதான் அவர்கள் நடிப்பை பாராட்ட வேண்டியதுதான். அவர்கள் சமூக நல பார்வையை பாராட்ட வேண்டியதுதான். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வாழ்க்கையில் படித்து முன்னேறுவது, இந்த சமுதாயத்தை முன்னேற்றுவது போன்ற கடமைகள் இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். நானும் ரசிகராக இருந்தவன்தான். அது தவறு இல்லை. ஆனால் எல்லையை தாண்டக்கூடாது. அது அவர்களது பெற்றோருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடும்.

தமிழக ஆளுநர் குறித்த கேள்விக்கு.. ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாத சிறப்பாக செயல்படுகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆகியே இரட்டை தலைமையாக இருந்து கொண்டு தமிழகத்தில் சனாதன கொள்கையை கொண்டு வர நினைக்கின்றனர். தமிழ்நாடு முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டை தமிழகம் என வைக்க வேண்டும் என்ற பிரச்னையை உருவாக்கி வருகிறார்கள்.

திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் இன்று மாற்றுவது குறித்த கேள்விக்கு..திராவிடம் என்பது வாழ்வியல்.ஸ்டேட் ஆப் மெட்ராஸ் என்பதை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு பலர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது. ஆன்லைன் ரம்மி மூலம் பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் நீட் போன்ற சட்டங்களை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டை தமிழகம் என கூறி பாஜகவினர் சனாதனக் கொள்கையை நிறைவேற்ற பார்க்கிறார்கள் என்றார் துரை வைகோ.

Updated On: 14 Jan 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...