மதுரையில் கட்சி பேனர்கள் அகற்றம்: பாஜக வினர் சாலை மறியல் போராட்டம்

மதுரையில் கட்சி பேனர்கள் அகற்றம்: பாஜக வினர் சாலை மறியல் போராட்டம்
X

மதுரையில் பாஜக பேனர்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை நகரில் பாஜக வைத்துள்ள பேனர்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மதுரை நகரில் பாஜக வைத்துள்ள பேனர்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாஜக நிர்வாகிகள் கூட்டமானது மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. இதை ஒட்டி, பாஜகவினர் மதுரை நகரில் பேனர்களை வைத்துள்ளனர். இதை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி உள்ளனராம். இதைக் கண்டித்து மதுரை அழகர்கோவில் சாலையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், மதுரை அழகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய பாஜகவினரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!