சிவகங்கை அருகே திறந்த வெளியில் நல்லிணக்க இப்தார் விருந்து
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, எஸ். புதூர் ஒன்றியத்தில் நடந்த திறந்தவெளி சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, எஸ். புதூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்தார் என்பது ரமலான் நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும். நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இந்தஉணவை உண்பது வழக்கம். இது ஞாயிறு மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது. நோன்பை முடிப்பதற்கு முதன் முதலாக ஈச்சம்பழத்தை உண்பது வழக்கம்.
எஸ் டி பி ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பில், சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் தாலுகா, எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் நடைபெற்றது .. மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது தாஹா வாழ்த்துரை வழங்கினார் .மதுரை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் சிறப்புரையாற்றினார்
திமுக அதிமுக கம்யூனிஸ்ட் மதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலூர் தொகுதி தலைவர் சித்திக் மேலூர் தொகுதியின் அமைப்புச் செயலாளர் சதாம் ,மேலூர் ஒன்றியத்தின் செயலாளர் சையது இமாம் மற்றும் தொகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu