வாடிப்பட்டியில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வாடிப்பட்டியில் நடந்த முதியவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா.
வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 31-வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது.
இந்தநிகழ்ச்சிக்கு, தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். டாக்டர் சீத்தாலட்சுமி, வழக்கறிஞர் சந்திரசேகர், கவுன்சில்ர்கள் ஐ.கே. குருநாதன், கார்திகாராணி மோகன், மீனாஆறுமுகக்கடவுள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர்குருசாமி வரவேற்றார்.
இதில், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தங்களும், 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், முனியப்பன், கேசவன், முன்னாள்கவுன்சிலர் மகாசரவணன், முருகாண்டி, ரவிக்கண்ணன், சாந்தி உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில், டி.எம்.சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஏ.வி.பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu