/* */

கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களை பயன்பெற செய்தவர் பிரதமர் மோடி -பாஜக விவசாய அணி பிரசாரம்

பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் திட்டத்தின் கீழ், சுமார் 107059 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது -வலசை முத்துராமன்.

HIGHLIGHTS

கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களை பயன்பெற  செய்தவர் பிரதமர் மோடி -பாஜக விவசாய அணி பிரசாரம்
X

மதுரை புறநகர் மேலூரில், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக விவசாயிகள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலசை முத்துராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டமானது, பிப்ரவரி. 18ம் தேதி, 2016 ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் பயிர் செய்து விட்டு, மழை இல்லாமலும், அதிகமான மழையால் பாதிப்படைந்து , வட்டிக்கு பணமாகவும், இடு பொருளாகும் வாங்கியதை அடைக்கமுடியாமல், தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால், நம் பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 2022 ,பிப்ரவரி 4-ம் தேதி இத்திட்டத்தின்கீழ் சுமார் 107059 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும், மோடி பிரதமராக ஆன, பின்பு எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று, பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்து உள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு வருடத்துக்கு மூன்று தவணையாக 6000 ரூபாய் தருகிறார். கொரேனா காலக்கட்டத்தில், உலகமே பொருளாதாரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில், கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள் பயன் அடையும்படி செய்தார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் கூட நம்பி தராத இந்த காலத்தில், ஓட்டுக்காக 500 -க்கும் ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு வாக்களிக்காமல், வருடத்துக்கு 6 ஆயிரம் 5 வருடத்துக்கு 30 ஆயிரம் வழங்கும் தாமரைக்கு நீங்கள் வாக்களித்தால் இந்தியா வல்லரசாகி விடும் நுண் பாசனத்துக்கு வருடத்துக்கு மத்திய அரசு சுமார் 5,000 கோடி வரை செலவு செய்கிறது. குறைந்த நீர், குறைந்த மின்சார செலவில், அதிக விளைச்சலை எடுப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

சொட்டுநீர் பாசனம் நபார்டு வங்கி உதவியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . கிராமத்தில், அதிகபட்சமாக 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி வருமானம் வரம்பின்றி இத்திட்டத்தின் பயனடையலாம். எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியம் அனைத்து பிசி விவசாயிகளுக்கு 90% மானியமும், பிற விவசாயிகளுக்கு 80% மானியமும் வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் இத்திட்டத்தின்கீழ் குட்டையில் தேக்கும் தண்ணீர் அளவுக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, பத்துக்கு பத்து அடி அகலமும் 3 அடி ஆழமும் கொண்ட பண்ணைக்குட்டை 10875 ஆயிரத்து மானியமாக வழங்கப்படுகிறது. பிசிகல் அண்ட் ஆப் சர்வீஸ் பார்மர் இந்தத் புதிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கிஷான் டிரன்ட் திட்டத்தின் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் பூச்சிக்கொல்லி ஊட்டச்சத்து தெளித்தல் பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப் உள்ளது. இதன் அடிப்படையிலேயே, தற்போது, தமிழக அரசு இது போன்ற ஓர் திட்டத்தின் விவசாய பட்ஜெட்டில் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரசாயன கலவை ஏற்ற இயற்கை விவசாயம் முதல் கட்டமாக கங்கை ஆற்றின் கரைகளில் ஐந்து கிலோமீட்டர் அகலத்திற்கு திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது .

பார் மாக்ஸ் புரோ டீஸர் கம்பெனி இத்திட்டமானது, இடைத்தரகர்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் இத்திட்டத்தின்கீழ் பத்துக்கும் மேற்பட்ட விளைபொருள் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து இந்தியா கம்பெனி சட்டம் 2013 இன் கீழ் பதிவு செய்து தங்கள் விலை பொருட்களுக்கு மதிப்புக் கூட்டும் வகையிலான ஒரு கம்பெனியை உருவாக்கலாம்.

சிறு விவசாயிகள் தான் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்ற அல்லது வெளியே எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்க இயலாத நிலையில், இத்தகைய விவசாய உற்பத்தியாளர் குழுமம் இதை மிகவும் சிறந்த வகையில் நிறைவேற்றி தருகிறது. இக்குழுவில் 100 விவசாயிகள் ஒன்றிணைந்து தலா ஆயிரம் இதன் முதலீடு செய்தால் ,அதற்கு மதிப்புக்கூட்டும் கருவிகள் மற்றும் நடைமுறையில் செலவினங்கள் அரசு குறைந்த வட்டியில் ரூ 10 லட்சம் வரை நிதி வழங்குகிறது. இன்றுவரை கிட்டத்தட்ட 9 ஆயிரம் கம்பெனியில் திட்டத்தின் கீழ் பதிவு செய்து உள்ளனர். இவற்றில், 8600 கம்பெனிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று, பல்வேறு நலத்திட்டங்களை நமது மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று வலசை முத்துராமன் பேசினார் . கூட்டத்தில், புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பூமி ராஜன், மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.

Updated On: 11 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்