தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பதவி: முன்னாள் அமைச்சர்

தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பதவி: முன்னாள் அமைச்சர்
X

மதுரையில் அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அதிமுகவில் ஜனநாயகம் இல்லை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என 30 பேர் பரிந்துரை செய்த பிறகுதான், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி உடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் நானும் நிற்பேன் என்று சொன்னால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த அதிமுக பிரமுகரை தாக்கி வெளியேற்றியது குறித்து முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், அதிமுக மதுரை கிழக்கு மாவட்ட வேட்புமனுவின் போது தன்னிலை விளக்கம் அளித்தார்:

அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பாக கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்:- பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என 30 பேர் பரிந்துரை செய்த பிறகுதான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதிமுகவில் ஜனநாயகம் இல்லை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். தகுதி உடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் நானும் நிற்பேன் என்று சொன்னால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

நடைபெற உள்ள உள்ளாட்சி நகராட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அனைத்து இடங்களிலும் வெல்ல முடியும். ஜனநாயகம் அதிமுகவில் தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்