மதுரையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தாெகுப்பு: அமைச்சர் வழங்கல்

மதுரையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தாெகுப்பு: அமைச்சர் வழங்கல்
X

மதுரையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

கூட்டுறவுத்துறையின் சார்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.505 மதிப்பிலான 21 வகையான மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.505 மதிப்பிலான 21 வகையான மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட அரிசி, பருப்பு, முந்திரி, திராட்சை, வெல்லம், கரும்பு மற்றும் மஞ்சள் பை உட்பட ரூ.505 மதிப்பிலான 21 வகையான மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் விழாவினை, தமிழ்நாடு முதலமைச்சர், துவக்கி வைத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 1,394 நியாய விலைக்கடைகளில் உள்ள 9 இலட்சத்து 17 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதார்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் ஆயிரத்து 718 குடும்ப அட்டைதாரர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 255 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 46 கோடியே 42 இலட்சத்து 23 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாத மதுரை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி மையத்தினை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின்போது மக்களை சிறப்பான நடவடிக்கைகள் மூலம் பாதுகாத்து வந்தார்கள். வடகிழக்கு பருவமழையின் போது, மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் உடனடியாக சீர்செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். தற்போது, கொரோனா நோய்தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வராக பதவியேற்ற நாள்முதல் நாளது தேதி வரை ஓய்வின்றி மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் பணியிலும், அடிப்படை வசதிகள் மற்றும் சலுகைகள் மக்களை நேரடியாக சென்றடையும் வகையிலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னோடி முதல்வராக திகழ்கிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின்போது தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களை பயன்படுத்தி கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இக்குழுக்கள் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நோய்த்தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியாதவர்ளை வருவாய்த்துறை, உள்ளுர் பஞ்சாயத்துத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மூலம் கண்டறியப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படும். ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னைச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் மற்றும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி, மற்றும் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (இணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர்) பிரியதர்ஷினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜூவா , மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், மற்றும் துணை பதிவாளர் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!