மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா

மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
X
மதுரை அருகே, வரிச்சூரில் புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வரிச்சூர் கிராமத்தில் மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில், புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழக வணிகவரி பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, ஊராட்சித் தலைவி முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!