மதுரை தல்லாகுத்தில் பார் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: 2 பேர் கைது
பைல் படம்
உசிலம்பட்டி வடுகபட்டி ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம்(54.). இவர் அழகர்கோவில் மெயின் ரோட்டில் பார் ஒன்றில் சமையல்காரராக ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி தாக்கி, அவரிடமிருந்து ரூ 3 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்வம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் பணம் பறித்த நேதாஜி மெயின் ரோடு முல்லை நகர் விஜயராஜன் மகன் ரவுடி ராஜா என்ற ராஜசேகர்(30,) பி.டி.ஆர் மெயின் ரோடு இந்திரா நகர் ரவி மகன் சக்திவேலை(18) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில். மதுரையில் நான்கு பேர் தற்கொலை
மதுரை கூடல் நகர் அன்பு நகரை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பாப்பாத்தி(48.). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டி ருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய பாப்பாத்தியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பிரதாமாக உயிரிழந்தார். இது குறித்து மகன் சக்திவேல் கொடுத்த புகாரில் கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மதிச்சியத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை மதிச்சியம் புளியந்தோப்புவை சேர்ந்தவர் கணேசன்(65.). இவருக்கு சர்க்கரை நோய் காரணமாக காலில் புண் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக அதற்கு சிகிச்சை அளித்து வந்தார். குணமடையவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் மகேந்திரன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் கணேசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ் எஸ் காலனியில் மயங்கி விழுந்த முதியவர் பலி
பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலகுரு(60 ).இவர் பைபாஸ் ரோடு சர்ச் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் உள்ள டாய்லெட் அருகே சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி ராஜலட்சுமி எஸ் எஸ் காலனி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் பாலகுருவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
தெற்கு வாசல் சப்பானிகோவில்தெரு கணேசன் மகன் சதீஷ்குமார்(33.). இவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். அவற்றை திருப்பிச்செலுத்தமுடியவில்லை.இதனால் மன அழுத்தத்தில் இருந்துவந்தார்.இதனால் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து அம்மா வாசுகி தெற்குவாசல் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபர் சதீஷ்குமாரின் தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்மட்டிபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
மதுரைசொக்கலிங்க நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பங்கஜம்(56.). இவர் சம்பட்டிபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அவர் எம்ஜிஆர் சிலை அருகே சென்றபோது அந்த வழியாக பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து பங்கஜம் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
புது விளாங்குடியில்வீட்டை உடைத்து ஐந்தரை பவுன் தங்க நகை திருட்டு
மதுரை புது விளாங்குடி இந்திரா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துசுந்தரம்( 65 ).சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார் .அப்போது வீட்டின் கதவை உடைத்து வீடு புகுந்த மர்ம ஆசாமி பீரோவில் வைத்திருந்த வளையல், நெக்லஸ் உட்பட ஐந்தரைப்பவுன் தங்கள் நகைகளை திருடி சென்று விட்டார் .இந்த திருட்டு குறித்து முத்து சுந்தரம் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu