பிறருக்கு கொடுப்பதில் தான் இன்பம்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

பிறருக்குக் கொடுப்பதில் தான் இன்பம் இருக்கிறது என்றார் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்.
மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் பார்வையற்றோருக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: வாழ்வின் மகிழ்ச்சி என்பது பணம் பதவி புகழ் ஆகியவற்றால் மட்டும் வருவதல்ல. இது முழுக்க முழுக்க அவரது மனநிலையைப் பொறுத்த விஷயம். மன நிம்மதி என்பதும் அதை குறைத்துக் கொள்வதும் நம் வாழ்க்கையின் பார்வையிலேயே உள்ளது. ஒன்றை பறிக்க இயற்கை மற்றொரு கொடையை கொடுக்கிறது.
குறைபாடுகளை நம்மிடம் இருக்கும் வேறு ஆற்றலால் நிறைவு செய்துவிட முடியும் வாழ்வின் தெளிவு என்பது நம் வாழ்க்கை பார்வைகளில் தான் உள்ளது வாழ்க்கைப் பார்வைகளை மாற்றிக் கொண்டு விட்டால் வாழ்வு என்பதே இனிதான ஒன்றுதான் வாழ்வில் மன நிறைவு பெறுவதற்கு பிறருக்கு சேவை செய்வதில்தான் இருக்கிறது. பெரும் போது பெறுகிற இன்பம்தான் பலருக்கு புரியும் ஆனால் கொடுப்பதிலும் இன்பம் இருக்கிறது. நமக்கு எல்லாம் தந்திருக்கும் இந்த சமூகத்திற்கும் மண்ணிற்கும் நாம் ஏதேனும் திரும்ப செய்துதான் ஆகவேண்டும் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்பான் பாரதி. இதை ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்றி நடந்தால் இந்த தேசம் வளம் பெறும் என்றார் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்.
மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ,விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி தலைமை வகித்தார். ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.. நிகழ்ச்சியில், நடிகர் வையாபுரி கொடை யாளர்களுக்கு சேவா ரத்னா விருதினை வழங்கி பேசினார் . ஆடிட்டர் சேது மாதவா, எஸ் வி எஸ் கடலை மாவு நிறுவனம் நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை, பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu