மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாநகராட்சி  மேயர் தலைமையில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

மதுரையில் மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பங்கேற்று மனு அளித்தனர்

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 134 மனுக்கள் முறைப்படி கணினியில் பதிவு செய்யப்பட்டன

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) ஆனையூர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் தவ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில்நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ,சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி 22 மனுக்களும், குடிநீர் குழாய் வரி தொடர்பாக 23 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 7 மனுக்களும், சொத்து வரி விதிப்பு தொடர்பாக 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக 10 மனுக்களும், காலிமனை வரி தொடர்பாக 23 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 9 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 38 மனுக்களும் என மொத்தம் 134 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து , மேயர் , ஆணையாளர் ஆகியோர் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இம்முகாமில் ஏற்கனவே, மனுக்கள் அளித்த மனுதாரர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரி, கட்டிட வரைபட அனுமதிக்கான ஆணைகளை வழங்கினார்கள். இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, உதவி ஆணையாளர் ரமேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், உதவிப்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், சோலைமலை, சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil