மதுரையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 16 பேர் கைது

மதுரையில் பல்வேறு  குற்றச்சம்பவங்களில்  ஈடுபட்ட 16 பேர் கைது
X
மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 16 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

கார் பார்க்கிங் செய்வதில் நடந்த தகராறில் உரிமையாளரை கல்லால் தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பி டி ராஜன் ரோட்டைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் வீரமணி( 31). அதே பகுதியில் தனது காரை நிறுத்துவதில் தவறாக ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிபி குளம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலமுருகன் என்ற பாலா( 23,), மீனாம்பாள் புரம் சத்தியமூர்த்தி குறுக்கு தெருவை சேர்ந்த முத்தையா மகன் திலீபன்( 24,), பிவி குளம் பாண்டியன் நகர் முகமது அலி ஜின்னா மகன் முகமது இப்ராஹிம்( 22,), பிபி குளம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் மகன் அஜித்( 27 ) ஆகியோர் அவருடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து வீரமணி தல்லாகுளம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய பாலமுருகன், திலீபன், முகமது இப்ராஹிம், அஜித் ஆகிய நாள் வரையும் கைது செய்தனர்.

மதுரையில் கத்தி அரிவாளுடன் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது:

ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் நக்கன்கோட்டையை சேர்ந்தவர் தனசேகரன் மகன் குமரேசன் .இவர் கே புதூர் சம்பக் குளம் மாநகராட்சி கழிப்பிடம் அருகே சென்றபோது அவரை வழிமறித்து, கே .புதூர் விஸ்வநாதன் நகர் ரவிச்சந்திரன் மகன் ஆனந்த ரங்கன்( 26 ),மேலூர் நொண்டி கோவில்பட்டி குணசேகரன் மகன் ரஞ்சித் குமார்( 25,) இருவரும் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூ. 520ஐ வழிப்பறி செய்தனர். இந்த சம்பவம் குறித்து குமரேசன் புகாரில் கே . புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

சிம்மக்கல் முத்து இருளப்ப பண்டிதர்தெருவை சேர்ந்தவர் கோபி( 40 ).இவர் ஆனையூர் மெயின் ரோடு மஞ்சளம்மன் கோவில் அருகே சென்றபோது அவரை வழிமறித்த கீழ பனங்காடி வேதவல்லி நகர் பூவன தேவர் மகன் மணிகண்டன்( 31,), ஆலங்குளம் டிசைன் நகர் மூன்றாவது தெரு, பாண்டி மகன் பிரதீப்( 21 ),அவருடைய சகோதரர் பிரசன்னா( 21,), ஆலங்குளம் ரோஜா நகர், வெள்ளைச்சாமி மகன் பாண்டியராஜன்(20 )ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ 800ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோபி கொடுத்த புகாரில் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர் .

ஒத்தக்கடை பாரத் நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் நாகராஜ்( 33).இவர் பி.பி.குளம் மருது பாண்டியர் நகரில் சென்று கொண்டிருந்தார். அவரை பி. பி. குளம் நேதாஜி மெயின் ரோடு செல்லப்பாண்டி மகன் ஜோதி பாசு(19 ),முல்லை நகர் இந்திரா நகர் 2வது தெரு ஆனந்தராஜ் மகன் வேல்முருகன்(21) இருவரும் கத்திமணையில் மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் இரண்டாயிரத்தை வழிப்பறி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர்.

கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் தீனா முருகேசன்(24). இவர் எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் கார் பார்க்கிங் அருகே சென்றார். அவரை எல்லீஸ் நகர் காந்திஜி காலனி மூன்றாவது சந்துவை சேர்ந்த சம்சுதீன் மகன் முபாரக் அலி( 22 ) கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது பிடிபட்டார்.அவரை எஸ் எஸ் காலனி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் மொத்தம் பல்வேறு இடங்களில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கொலை , கொள்ளை திட்டங்களுடன் பதுங்கி இருந்த ஏழு பேர் கைது:

மதுரையில் கொலை கொள்ளை திட்டங்களுடன் பதுங்கி இருந்த ஏழு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, மிளகாய் பொடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் .ஹமதுரை அம்மாதிடல் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அண்ணாநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாளுடன் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது அண்ணா நகர் யாகப்பா நகர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு கணேசன் மகன் கார்த்திக் என்ற இட்லி கார்த்திக்( 31 ) என்று தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

தத்தனேரி கன்மாயக்கரை ரயில்வே ட்ராக் அருகே பதுங்கி இருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்லூர் பாரதி நகர் பொன்ராஜ் மகன் சசிகுமார்( 30,) தத்தனேரி முனியாண்டி கோவில் தெரு முருகேசன் பாண்டி மகன் மகாராஜன் என்ற முட்டைக் கண் மகாராஜன்( 23 ),செல்லூர் அகிம்சாபுரம் நான்காவதுதெரு கருப்பசாமி மகன் மதன்குமார்(27), மீனாம்பாள்புரம் ஓடைகரை பால்சாமி மகன் ஜெயபாண்டி என்ற கஞ்சி முட்டி பாண்டி (33 ),தத்தனேரி சிவகாமி நகர் நாகராஜ் மகன் கார்த்தி என்ற கிடாரி கார்த்தி( 22), என்று தெரிய வந்தது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் ஒன்று கத்தி ஒன்று மரக்கட்டை ஒன்று மிளகாய் பொடி பாக்கெட்டுகள் கற்களையும் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் போலீசார் கிரிவலப் பாதை பனங்குளம் கண்மாய் பாதை சந்திப்பருகே சென்றபோது அங்கு கையில் வாளுடன் பொதுமக்களை மிரட்டிய தென்பரங்குன்றம் பி டி ஆர் நகர் 2வது தெருவை சேர்ந்த டேவிட்ராஜா மகன் தினகரன் (23 )அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மதுரையில் பல்வேறு இடங்களில் அராவாள் கத்தி மிளகாய் பொடி மரக்கட்டை, கற்களுடன் பதுங்கி இருந்த மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!