மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் உண்டியல் திறப்பு

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் உண்டியல் திறப்பு
X

 மதுரை தல்லாகுளம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணி கணக்கெடுக்கும்  பணி நடைபெற்றது.

மதுரை கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ 2 லட்சம் செலவில் கோவில் வாசலில் தரையில் விடுப்புகள் போடப் பட்டுள்ளன

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில். இத்திருக்கோயிலின் உபகோயிலான, தல்லாகுளம்,அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிப்பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் மு. இராமசாமி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சுரேஷ் , திருக்கோயில் தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் ஜெயலட்சுமி மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர் அருள்செல்வன, திருக்கோயில் பணியாளர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் நடந்து செல்ல தென்னை நார் விரிப்பு அமைத்த கோயில் நிர்வாகம்:

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 2 லட்சம் செலவில் ,கோவில் வாசல் முதல் கோட்டை வாசல் வரை தரையில் விடுப்புகள் விரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனால், தரையில் காலனி இன்றி நடந்து செல்வது மிகக் கடினம். அத்துடன், மதுரை கள்ளழகர் திருக்கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோயில் வாசல் முதல் அழகர் சந்நிதி வரை கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால், கோடை காலங்களில் தரையில் கடும் வெப்பம் நிலவுகிறது .இதனால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.இதனைக் கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் ஆனது ரூபாய் இரண்டு லட்சம் செலவில் தென்னை நார்களான விரிப்புகளை, கோவில் வாசல் வரை விரித்துள்ளனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக சந்நிதி வரை பகல் நேரங்களில் நடந்து செல்ல ஏதுவாகிறது. கோயில் நிர்வாகம் செய்த ஏற்பாட்டினால், பக்தர்கள் பகல் நேரங்களில் விரிப்புகளில் நடந்து செல்ல ஏதுவாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story