காரை நிறுத்த மறுப்பு; கடும் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் 'சீரியஸ்'

காரை நிறுத்த மறுப்பு; கடும் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் சீரியஸ்
X

பைல் படம்.

மேலூரில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பேங்க்ரோடு அருகே திருச்சி மெயின்ரோட்டில் சக்ரா கேபிள் எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை தற்போது, கண்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜா, மேலூரைச் சேர்ந்த அப்பாஸ் உள்பட சிலர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கேபிள் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கட்டுமான பணிகளுக்கான பொருட்களை அலுவலகம் முன்பு உள்ள சாலையில் போட்டு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அங்கு காரில் வந்த சிலர் காரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதற்கு அருகே நிறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து, ராஜா மற்றும் அப்பாஸ் ஆகியோர் காரில் வந்தவர்களிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், காரை தள்ளி நிறுத்துமாறு கூறி உள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் காரில் வந்த மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியதில் ராஜா மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஊழியர் அப்பாஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் குறித்து, தகவலறிந்து வந்த மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தாக்குதல் நடத்திய காரில் வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்