மதுரை மாவட்டத்தில் அக். 20-ல் கல்விக் கடன் மேளா: ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் முனைப்பு திட்டம் மூலம் அக். 20-ஆம் தேதி கல்விக் கடன் மேளா நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில பொருளாதார சூழல் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிட ஏதுவாக கல்விக்கடன் பெற உதவும் வகையில் சிறப்பு திட்டத்தினை மதுரை மாவட்டத்தில் நடப்பு 2021-2022-ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, கல்விக்கடன் முனைப்பு திட்டம் மதுரை 2021 -2022 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை, செயல்படுத்த ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆ-பிரிவில் ஒரு உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் (20.10.2021) புதன் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை "கல்விக்கடன் மேளா" என்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்மேளாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் கலந்து கொள்கின்றன. வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அனைத்து மாணவ, மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu