புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம்: ரோட்டரி ஏற்பாடு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம்: ரோட்டரி ஏற்பாடு..!
X

மதுரையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முடி தானம்வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்.

மதுரையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம்: கல்லூரி மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் போட்டிப் போட்டு தானமாக வழங்கினர்:

மதுரையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம்: கல்லூரி மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் போட்டிப் போட்டு தானமாக வழங்கினர்:

மதுரை:

மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் புற்று நோயால், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை திருப்பாலையில் உள்ள யாதவ மகளிர் கல்லூரியில் , நடைப்பெற்றது.

ரோட்டரி பெண் உறுப்பினர்கள் மற்றும் மாணவியர்கள் முடி தானம் வழங்கும் நிகழ்வை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.


ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ரேவதி குமரப்பன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார் , கிருபா தியானேஷ், டாக்டர் சுரேஷ் பாண்டியன், மண்டல செயலாளர்கள் முருகானந்த பாண்டியன், .அசோக், உதவி ஆளுநர்கள் டாக்டர் ரமணன் கவுசல்யா, ஆண்டனி, ரோட்டரி செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி சங்க பெண் உறுப்பினர்கள் மற்றும் யாதவ பெண்கள் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு முடி தானம் செய்தனர். தானமாக பெறப்பட்ட முடியினை, கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தனர். கண்தானம்,உடல் தானம், ரத்த தானத்தை தொடர்ந்து முடி தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Next Story