மதுரை அருகே புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் மூர்த்தி துவக்கம்
மதுரை அருகே புதிய திட்டப்பணிகள் அமைச்சர் மூர்த்தி தொடக்கி வைத்தார்
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.732.08 இலட்சம் மதிப்பீட்டில் 23 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி 6 லட்சம் கடன் உதவிகளைவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திவழங்கினார்.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதிய அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக் கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அரசுப் பள்ளிக்கான சுற்றுச்சுவர் என, ரூ.732.08 இலட்சம் மதிப்பீட்டில் 23 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மஞ்சம்பட்டி கிராமத்தில்,புதிய நியாயவிலைக் கட்டிடம் ,ஊராட்சி ஒன்றிய பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடத்தை திறந்து வைத்துபுதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து , சத்திரப்பட்டியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து 161 வீடுகளுக்கு புதிய குழாய் இணைப்புகளையும் காவனூரி்ல் புதிய ஊராட்சி மன்ற கட்டடம், புதிய நியாயவிலை கடை மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், வெளிச்சநத்தம் கிராமத்தில் புதிய நியாயவிலை கடை கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மேலும்,மாலப்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடத்தை திறந்து வைத்து 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி 6 லட்சம் கடனுதவியை வழங்கினார்.அதேபோல, தெற்கு பெத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடம் மற்றும் புதிய நியாயவிலை கடை கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை, தொடங்கி வைத்தார். தொடர்ந்து ,
ஆலத்தூர் ஊராட்சி மாரணிவாரியேந்தல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மேலும், இரணியம் ஊராட்சி அழகர் நகர் பகுதியில் புதிய தார் சாலை மற்றும் ஜாங்கிட் பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, வீரபாண்டி ஊராட்சி அய்யர் புதூர் மற்றும் வீரபாண்டி ஆக்கிய கிராமங்களில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களையும், வீரபாண்டி கிராமத்தில் புதிய நியாய விலை கடையையும், பேய்குளம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் ,ஒவ்வொரு கிராமத்திலும் பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிகழ்வுகளின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற நோக்கில் திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறார். ஊரகப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நிறைவேற்றிட உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்க ளில்ரூ.732.08 இலட்சம் மதிப்பீட்டில் 23 வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் புதிய அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக் கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அரசுப் பள்ளிக்கான சுற்றுச்சுவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விற்பனை மற்றும் உற்பத்தி கூடம் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுக்கான அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு காணப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ,தொடர்ந்து இதே போல ஊரகப்பகுதிகளில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி உட்பட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu