மதுரை அருகே சக்குடியில் ஜல்லிக்கட்டு விழா: காளைகள் சீறிப்பாய்ந்தன.

மதுரை மாவட்டம்சக்குடியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
Near Madurai Jallikattu
மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடி
வீரர்கள், அடக்கி பரிசுகளை பெற்றனர். காளைகள் சீறிப்பாய்ந்ததில் ,பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு, மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு விழாவானது கிராமத்தின் சார்பாக, வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, ஜல்லிக்கட்டு ஒட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் மூர்த்தி உட்பட கிராமப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம விழா கமிட்டினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து இருந்தனர்.
மதுரை அருகே குருவித்துறை விக்கிரமங்கலம் பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் சக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் கிராம கோயில் திருவிழா முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, அலங்காநல்லூரில் முனியாண்டி சுவாமி கோயில் திருவிழா முன்னிட்டும், சக்குடியில் கிராம தேவதை விழாவை முன்னிட்டும், ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில், பல ஊரிலிருந்து நானூறுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது .அத்துடன், விழா கமிட்டியின் சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது .அதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்களும், காளைகளும் பரிசோதனைக்கு பின்பு ஜல்லிக்கட்டு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu