பாலமேட்டில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி முளைப்பாரி ஊர்வலம்
மதுரை அருகே பாலமேட்டில் இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள்.
இம்மானுவேல் சேகரன் 67வது குருபூஜை விழாவையொட்டி மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெரு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக வானவேடிக்கை மேளதாளம் முழங்க பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி, பால் குடம் எடுத்து வந்து நுழைவு வாயிலில் உள்ள திருவுருவ படத்திற்கு மாலை அனைவித்து பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து உறவின்முறை சங்க கட்டிடம் முன்பாக உள்ள அவரது படத்திற்கு மாலை அணிவித்து அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, இம்மானுவேல் நினைவிடத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் மதிமுக திமுக உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் 67- வது ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்தினர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர், கடந்த சில நாட்களாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சிப் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், பணிகளை மேற்கொண்டார்கள். இம்மானுவேல் சேகரன் 67- வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில், மரியாதை செலுத்தி விட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தின், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்பட அளிக்கவில்லை என்றும், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு கொடுத்ததாகவும், குற்றம் சாட்டினார். அரசு, இந்த விஷயத்தில் தலையிட்டு, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையிடம் விளக்க கேட்க வேண்டும் என்றார்.
முன்னதாக, மதிமுக கட்சியினர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது, காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக அமைச்சர் உதயநிதி வந்ததும், தாங்களும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu