மதுரை அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி
விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பல்வேறு துறைகளின் சார்பில் 4572 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் 4572 பயனாளிகளுக்கு ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு வட்டம் எம்.சத்திரப்பட்டி பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பல்வேறு துறைகளின் சார்பில் 4572 பயனாளிகளுக்கு ரூபாய் 29 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரத்து 571 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு, கடந்த 2 ஆண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப் படையில், இன்றைய தினம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு வட்டம் எம்.சத்திரப்பட்டி பகுதியில் பல்வேறு துறைகளின் சார்பில் 4572 பயனாளிகளுக்கு ரூபாய் 29 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரத்து 571 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் பொருளாதார முன்னேற்றம் பெற்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பங்கேற்று தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூபாய் 188 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கினார்கள். நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 35000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன்தொகை 1000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து மீண்டும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கியுள்ளார்கள். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2147 மகளிர் சுயஉதவிக் குழுக்களில், 19752 நபர்களுக்கு ரூ. 38.50 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் அத்தொகையினை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில், பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தையும், குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில், இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள் என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி ,மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர்கள் வீரராகவன், மணிமேகலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu