மதுரை அருகே அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம் திருவேடகம் அருகே பள்ளி மாணவர்களை வரவேற்ற அமைச்சர் பி. மூர்த்தி
மதுரை: திருமால்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி தலைமையிலும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் முன்னிலையில் வருகை தரும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் திருமால்புரம் அரசு துவக்கப்பள்ளியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி, இனிப்பு, எழுதுகோல் மற்றும் பூங்கொத்து வழங்கியபின் கூறியதாலது:
மதுரை மாவட்டத்தில் (01.09.2021) இன்று முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 1,67,000 மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வருகை தரும் பட்சத்தில் 01.11.2021 இன்று முதல் 2,172 பள்ளிகளில் 1 ஆம் முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 3,46,000 மாணவர்கள் நேரடியாக வருகை தருவதை முன்னிட்டு, மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருகை தரும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து வகை பள்ளிகளிலும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டு செயல்முறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருகை புரிவதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார் படுத்தி எளிதில் அணுகி, நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிந்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி, பள்ளிச்சூழலை இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண்பதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்பறையில் வாய்மொழிப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதை கூறுதல் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப இடவசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக இருந்து வகுப்பறைகள் குறைவாக இருக்கும் நேர்வில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடவேளையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் முழுகவனத்துடன் கண்காணித்து வழிநடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள், தளவாடபொருட்கள், சமையல்பாத்திரங்கள், கதவு, ஜன்னல் உட்பட அனைத்து இடங்களையும் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப போதுமான அளவில் முகக்கவசம், கிருமிநாசினி பள்ளியின் நுழைவாயிலும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை எடுக்க தேவையான தெர்மல் ஸ்கேனர் கருவி உட்பட தேவையான பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டத்தினை, தலைமையாசிரியர்கள் நடத்தி அனைத்து விதமான பாதுகாப்பு நடைவடிக்கைகள் கற்றல் செயல்பாடுகள் குறித்து விவாதித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, திருமால்பரம் அரசு துவக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் உள்ள நியவிலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்க வேண்டும் என விற்பனையாளரை அறிவுறுத்தினார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் .ஆர்.சுவாமிநாதன், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர்.அ.நாராயணன் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் என்.திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu