மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முட நீக்கியியல் சாதனங்கள் வழங்கல்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முட நீக்கியியல் சாதனங்கள் வழங்கல்
X

மதுரை ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு  செயற்கை கால்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்களை,  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

அகில இந்திய மார்வாடி யூவா சங்கம் சார்பில், முடநீக்கியல் சாதனங்களை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். வழங்கினார்:

அகில இந்திய மார்வாடி யூவா சங்கம் சார்பில், 186 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் 90 முடநீக்கியல் சாதனங்களை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தலைமையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இவற்ற்றை வழங்கினார்.

அமைச்சர் பேசுகையில், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவோ ஏதாவது ஒரு பாதிப்பினாலோ அல்லது குறைபாட்டினாலோ கொஞ்சம் பின்தங்கி பலவீனமாக மற்றும் திறன் குறைந்து காணப்படுகின்றவர்களுக்கு, ஒரு சமுதாயம் எவ்வாறு அவர்களை அணுகி உதவி செய்கிறது என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படைநோக்கமாகும்.

சமூகநல ஆர்வலர்களுக்கு இருக்கின்ற நிர்வாகத் திறனும் நிதியை பயன்படுத்துவதில் இருக்கின்ற கட்டுப்பாடும் கவனமும் சமுதாயத்துக்கு பயனடையக் கூடியவை. ஏனென்றால், அவர்களை சுற்றி இருக்கக் கூடிய இடத்தில் மற்றும் தெரிந்த இடத்தில் வசிப்பவர்களை கண்டறிந்து அவர்களுடைய நிர்வாகத் திறனையும் சமூக ஆர்வத்தையும் பயன்படுத்தி அதனடிப்படையில், ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருவி என்ற அளவில் பயன்பெறச் செய்வது என்பது அரசை விட சிறப்பாக செய்யக்கூடிய செயலாகும் என்றார்.

நிகழ்ச்சியில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.செந்தில்குமாரி மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story