இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை
X

செய்தியாளர்களிடம் பேசியமருத்துவமனையின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் மருத்துவர் ஆர். சிவக்குமார் 

ஆபத்தான இதயச் சிதைவினால் பாதிக்கப் பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை செய்துள்ளது

தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், Ventricular Septal Rupture (VSR) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 76 வயதான முதியவருக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து அவரது உயிரை காப்பாற்றி யிருக்கிறது.

இந்நோயாளியின் நிலை குறித்து மருத்துவமனையின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் மருத்துவர் ஆர். சிவக்குமார் கூறியதாவது: சுவாசிப்பதில் சிரமம், அவ்வப்போது இருமலுடன் சளி வெளியேறுதல் ஆகிய பிரச்னைகளோடு இந்நோயாளி எங்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு செய்யப்பட்ட எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, இரத்த ஓட்ட அடைப்புள்ள இதய நோய் (IHD) / மிதமான இதய இடதுகீழறை பிரச்சனை / வி.எஸ்.ஆர். இருப்பதை வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட கரோனரி ஆஞ்சியோகிராம் சோதனை, கரோனரி தமனி நோய், ஒற்றை நாள நோய் மற்றும் எல்.ஏ.டி. – ல் ஸ்டென்ட் வழியாக தடையற்ற இரத்தஓட்டம் இருப்பதை காட்டியது.

இதயத்தின் இடது மற்றும் வலது கீழறைகளைப் பிரிக்கின்ற சுவரில் ஒரு துளை உருவாகியிருப்பதையே வி.எஸ்.ஆர். என அழைக்கிறோம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதயத்தின் இரு அறைகளிலும் உள்ள இரத்தம் ஒன்று கலக்கத் தொடங்கும்; கலந்த இரத்தம் நுரையீரல்களுக்கு பயணித்து, அவற்றை நிரப்பி உயிரிழப்பை விளைவிக்கும். இந்த சிக்கலுள்ள நோயாளிகளுள் சுமார் 90% நபர்கள் உயிரிழக்கின்றனர்.

இதய கட்டமைப்பு சார்ந்த இந்த குறைபாட்டை சரி செய்வதற்கு அறுவைசிகிச்சை சார்ந்த செயல்பாடே பொதுவான சிகிச்சை முறையாக பல காலமாக இருந்து வருகின்ற போதிலும், அறுவைசிகிச்சை செய்வதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ள நோயாளிகளின் இரத்தஓட்டம் மேலும் மோசமாகிவிடாமல் தடுப்பதற்கு உடனடியாக சருமத்தின் வழியாக இந்த துளையை மூடுவது பயனளிக்கக்கூடிய சிகிச்சை மாற்றாக இருக்கக்கூடும். எனினும், கதீட்டர் அடிப்படை யிலான வி.எஸ்.ஆர். சிகிச்சையில் இருக்கின்ற குறிப்பிட்ட சில பிரச்சனைகள் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியிருக் கின்றன.

இதய மயக்கவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். எஸ்.குமார் இந்த சிகிச்சை குறித்து கூறியதாவது: இந்த நோயாளிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவால் MI VSR சாதனத்தைப் பொருத்தி துளையை அடைக்கும் துல்லியமான சிகிச்சைத் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சருமத்தின் ஊடாக செய்யப்படும் கரோனரி இடையீட்டு சிகிச்சை பரவலாகி வரும் இக்காலகட்டத்தில் கடுமையான மாரடைப்பின்போது VSR சிகிச்சை என்பது குறைவாகவே செய்யப்படுகிறது.

உடனடியாக செய்யப்படும் துல்லியமான நோயறிதல் இதில் அத்தியாவசியம். இந்த குறைபாட்டை சரிசெய்து மூடுவதற்கான ஒரு முயற்சியை துல்லியமான நேரத்தில் மேற்கொள்வது VSR சிகிச்சையில் ஒரு முக்கியமான சவாலாக இருக்கிறது. இரத்தஓட்ட செயல்பாடு இதனை அனுமதிக்கும்போது, அறுவைசிகிச்சையை தவிர்ப்பதன் மூலம் அதனால் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ள பலன்களின் காரணமாக தகுந்த சிகிச்சைமுறை பயன்படுத்தப்பட வேண்டும்.”

பொது மயக்க மருந்தின் கீழ் செய்யப்பட்ட இந்த சிகிச்சைக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் ஆனது. வெற்றிகர மான இந்த சிகிச்சை செய்யப்பட்டதற்கு 4 நாட்களுக்குப் பிறகு இந்நோயாளி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது மற்றவர்களைப் போல தனது இயல்பான செயல்பாடுகளை இவர் மீண்டும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் என். கணேசன் மற்றும் டாக்டர் எம். சம்பத்குமார் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று, சிரமமான இந்த சிகிச்சைமுறை பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்தனர்; Cardiac Cauterization செயல்முறையின் எதிர்காலம் பற்றிய தங்களது கருத்துகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் ஆர்.எம். கிருஷ்ணன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் பி. கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!