வெளிச்சநத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம்: தொடங்கிவைத்தார் அமைச்சர்

வெளிச்சநத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம்: தொடங்கிவைத்தார் அமைச்சர்
X

இலவச பொது மருத்துவ முகாமை,  அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை அருகே வெளிச்சநத்தம் கிராமத்தில், மருத்துவ முகாமை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில், சத்யசாயி சேவா சமிதி சார்பில், கிராம தத்தெடுப்பு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த அமைப்பு மூலம், கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான இலவச மருத்துவ மற்றும் பொது சுகாதார வசதிகளை செய்து கொடுக்க உள்ளதாக, சேவா சமிதி அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் வீரராகவன், ஒன்றியச் செயலாளர் சிறை செல்வம் ,மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் சுரேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீமைச்சாமி, சத்திய சாயி சேவா நிறுவன மாவட்டத் தலைவர் நாராயணசுவாமி, மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் வேலம்மாள். துணைத் தலைவர் பபிதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!