மதுரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

மதுரையில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி, செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், வழங்கப் படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்

மதுரை மாநகராட்சி, செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மேயர் .இந்திராணி பொன்வசந்த், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளான சாலைகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் பதித்தல்,பாதாள சாக்கடை திட்டம், மருத்துவமனைகள் விரிவாக்கம், நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ள பல்வேறு பணிகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மண்டலம் 2 வார்டு எண்.23 செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மேயர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மருத்துவர் அறை, ஊசி மற்றும் சுருள் படம் எடுக்கும் இடம் ,மருந்து கிடங்கு, ஆய்வகம், காய்ச்சல் உள்நோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ அறை, பெண்கள் நல மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ அறை பேறுகால பின்கால கவனிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அறைகளை பார்வையிட்டார்.

மேலும், மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளான தினசரி நோயாளிகள் வருகைப் பதிவேடுகள், வழங்கப்படும் மருந்து மாத்திரைகளின் பதிவேடு, மருந்து மாத்திரை இருப்பு பதிவேடு, குழந்தைகள் நல பெட்டகம் பதிவேடு, பாலி கிளினிக் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளையும், மருத்துவமனையில் திங்கட்கிழமை பொது மருத்துவம், செவ்வாய்க்கிழமை மகளிர் மகப்பேறு மருத்துவம், புதன்கிழமை குழந்தைகள் நல மருத்துவம், வியாழக்கிழமை கண் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி, வெள்ளிக்கிழமை தோல் நோய் மற்றும் பல் மருத்துவம், சனிக்கிழமை மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிக்சை அளிக்கும் முறைகள்.

மேலும், சிறப்பு மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படும் சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மண்டலம் 2 வார்டு எண்.1 யூனியன் பேங்க் காலனி 1வது மற்றும் 2வது தெருவில் 2.02 கிலோ மீட்டர் நீளத்திற்கு திட்டம் 2 தொகுப்பு 10 கீழ் ரூ.166.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர் வினோத்குமார் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, குமரவேல், உதவிப்பொறியாளர் கள் கருப்பையர, ராஜசீலி, உதவி செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture