மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை மேயர் துணை மேயர் ஆய்வு

மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை  மேயர் துணை மேயர் ஆய்வு
X

சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து, மரம் நட்ட மதுரை மேயர் மற்றும் துணை மேயர்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில்- மதுரை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது

மதுரை: சித்திரை திருவிழாவின்போது அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடந்து முடிந்தது, இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது, இதில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கோவில் நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் தற்போது நிரந்தர பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சித்திரை திருவிழாவின் போது என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்பது குறித்து மதுரையின் புதிய மேயராக பதவி ஏற்ற இந்திராணி பொன்வசந்தம் மற்றும் துணை மேயராக பதவி ஏற்ற நாகராஜன் ஆகியோர் கேட்டறிந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஓபுளாபடித்துறை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை ஆய்வு அங்கு மரக்கன்று நட்டு சென்றனர். அவர்களுடன் மதுரை ஆணையாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!