மதுரை அருகே அழகர்கோவில் மஹா கும்பாபிஷகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை அருகே அழகர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
மதுரை அருகே அழகர்கோவில் கும்பாபிஷேகத்தைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் பெருமாள் குடிகொண்டிருக்கிறார். இக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்றும் அதே மண்டபத்தில் 40 பட்டர்கள் கொண்ட குழுவினர் ஒரே நேரத்தில் 8 யாக குண்டத்திலும், வேத மந்திரங்களுடன்யாக பூஜைகள் நடந்தது. மேலும், கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கள்ளழகர் கோவிலில் பதினெட்டாம் படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம் , முழுக்க முழுக்க வண்ண வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் படிகருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர் , மற்றும் தற்போது பெய்யும் மழை நீர் சேர்ந்து நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத்தில், இந்த தெப்பக்குளம் நிரம்பியிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்துடன் இன்று காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் நடைபெற்றது. இதில், முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி விழா நடைபெற்றது.
இந்த விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மு. ராமசாமி, அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.குடமுழுக்கு விழாவையொட்டி, மதுரை மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu